சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் (TVK - Tamizhaga Vazhvurimai Katchi) சார்பில் வேணுகோபால் போட்டியிடுகிறார். அதே சமயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் (TVK - Tamizhaga Vettri Kazhagam) இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளராக உள்ளது. இந்நிலையில், வேணுகோபால் தனது பிரசாரத்தின் போது 'TVK' என்ற சுருக்கப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, வாக்காளர்களிடையே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புகாரைப் பரிசீலித்த பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, இது தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேணுகோபாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வாக்காளர்களைத் திசைதிருப்பும் வகையில் செயல்படுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், இந்தப் புகார் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான சுருக்கப் பெயரைக் கொண்ட இரு கட்சிகள் ஒரே தொகுதியில் களம் காண்பதால், சின்னம் மற்றும் கட்சிப் பெயரில் வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
LIVE 24 X 7









