வரலாறு காணாத அவப்பெயர்:
திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை இவ்விரு செய்திகளும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளன.
ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதிசெய்ய முடியாதது மட்டுமன்றி, வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை.
பகல் கனவு காணும் முதலமைச்சர்:
ஆளத் தெரியாதவர்கள் கைகளில் சிக்கியுள்ள நமது தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், பஞ்சமில்லாமல் எங்கும் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன, காவல்துறையினர் திமுக-வின் கூலிப்படைகள் போல செயல்படுகின்றனர். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் மக்கள் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால், திமுக ஆட்சியில் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழும் தமிழக மக்கள், அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போது வரும், இந்த அலங்கோல ஆட்சியை அரியணையிலிருந்து எப்போது அகற்றலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









