5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல்.. ஆய்வு செய்யப்படும் அன்பில் மகேஷின் BANK ACCOUNTS!

5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல்.. ஆய்வு செய்யப்படும் அன்பில் மகேஷின் BANK ACCOUNTS!

தனியார் பள்ளி அங்கீகாரத்திற்காக ரூ.400 கோடி வசூலித்ததாக எழுந்த புகாரில், கைதான அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

Author: Christon அரசியல்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடிகள் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட ஆய்வில், தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தை இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் 5,000 தனியார் பள்ளிகளிடமிருந்து தோராயமாக ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான அரசக்குமாரின் வங்கிக் கணக்கிற்குச் சில பள்ளி நிர்வாகங்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் அனுமதி கேட்டுச் சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, வழக்கு தொடர்பான பணப்பரிவர்த்தனை ஆவணங்களைச் சென்னை காவல்துறை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

முன்னாள் அமைச்சரின் வங்கிக் கணக்குகளை விரிவாகச் சோதிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கலைவாணர் அரங்கத்தில் அவர் பேசிய பழைய வீடியோ பதிவு ஒன்று ஆதாரமாகக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலும் விசாரணைக் கோணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.