தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, தொடர்ந்து 2வது நாளாக பாமக பொறுப்பாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். கூட்டத்தில் பேசிய அன்புமணி, ராமதாஸ் கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல, தனது குலதெய்வம் - குலசாமி எனக் கூறினார்.
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு நாம் வேலையை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடையே பேசினார். விமர்சனங்களை தூசியை தட்டுவது போல தட்டுங்கள். பொறுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்று கிடையாது. கட்சி யார் சொத்தும் கிடையாது. ராமதாஸ் வழிகாட்டி, பாமக தலைவர் நான். ராமதாஸ் வழியை பின்பற்றி வெற்றி பெறுவோம். ராமதாஸ் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். தேர்தலுக்கு வியூகம் வகுத்துள்ளோம். எந்த குழப்பமும் வேண்டாம். கட்சி யார் சொத்தும் கிடையாது. நிர்வாகிகளை யாராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.
தானே பாமகவுக்குத் தலைவர் எனவும் ராமதாஸ் வழியை பின்பற்றி வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரத்தில் மோதல் போக்கை கைவிடக்கோரி தைலாபுரம் ராமதாஸ் இல்லம் முன்பு பாமக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி கடலூர் மாவட்ட பாமகவினர் வலியுறுத்தினர்.
ராமதாஸ் - அன்புமணி இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு ஆடிட்டர் சுப்புரத்தினம், கர்நாடகவைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்பாபு ஆகியோர் ராமதாஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
LIVE 24 X 7









