பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வந்த மோதல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் கட்டுப்பாடு யாரிடம் உள்ளது, முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக இரு தரப்பினரும் வெளிப்படையாக கருத்து மோதலில் ஈடுபட்டதோடு, நீதிமன்றம் வரை சென்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியதால், பாமகவில் ஏற்பட்ட பிளவு வெளிப்படையாகத் தெரிந்தது. இதனால், தந்தை - மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்து வந்தது.
இந்த நிலையில், ராமதாசின் 61-வது திருமண நாளையொட்டி, அவரது தைலாபுரம் இல்லத்துக்கு குடும்பத்துடன் நேரில் சென்ற அன்புமணி ராமதாஸ், தாய் - தந்தையிடம் ஆசி பெற்றார். மகனை பார்த்ததும் ராமதாஸ் ஆரத்தழுவி வரவேற்றது, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், சுருக்கமாக, "இனி நல்லது நடக்கும்" என்று கூறினார். இந்த ஒரு வரியே, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தந்தை - மகன் மோதலுக்கு முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பை பாமக தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் மோதிய இருவரும், குடும்ப பாசத்தில் மீண்டும் இணைந்திருப்பது, பாமகவில் புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் வெகுவாக எழுந்துள்ளது.

LIVE 24 X 7