மத்திய அரசு நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தைக் கூட்டித் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஆலோசித்து வருவதாக கூறப்படும் சூழலில், தென்மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் சாய்குமார் மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட இக்கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கிப் பேசினார். அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறை மசோதாவைக் கைவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையான 543 என்பதை உயர்த்தக் கூடாது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகரித்தால் நாடாளுமன்ற நடவடிக்கை கேலிக்கூத்தாகிவிடும்.
அமெரிக்காவில் தொடக்கத்தில் 13 மாகாணங்கள் இருந்தபோதும், பின்னர் அது 50 மாகாணங்களாக உயர்ந்தபோதும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அதே நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றி 543 என்ற எண்ணிக்கையை அப்படியே தொடர வேண்டும்.
திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தாலும், இதே நிலைப்பாட்டையே அவர்களும் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மசோதாவிற்கு எதிராகச் செயல்படாமல் திமுக வெளிநடப்பு செய்தாலோ அல்லது ஆதரவு அளித்தாலோ, அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து மசோதா எளிதில் நிறைவேற வழிவகுக்கும். எனவே, இந்த மசோதா நிறைவேறாமல் தடுக்க திமுகவின் ஒத்துழைப்பைப் பெறுமாறு திருமாவளவன் மூலம் அறிவாலயத்திற்கு முதலமைச்சர் விஜய் தூது அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. மசோதாவைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கை, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்தத் தவெக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

LIVE 24 X 7