அரசியல்

அது FAKE-UH.. காரில் ஸ்கூட்டர் நம்பர் பிளேட்..? சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்..!

விசிக தலைவர் திருமாவளவன் இருசக்கர வாகனத்தின் போலிப் பதிவெண் கொண்ட காரில் பயணித்ததாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

அது FAKE-UH.. காரில் ஸ்கூட்டர் நம்பர் பிளேட்..? சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்..!
Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கப் பயன்படுத்திய காரின் பதிவெண் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது அவர் 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

தொடக்கத்தில் அவர் டெஸ்லா காரில் வந்ததாகக் தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், மின்சார வாகனத்திற்குரிய பச்சை நிறப் பலகை இல்லாமல் வெள்ளை நிறப் பலகை இருந்ததால் அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ எனத் தெரியவந்தது. இருப்பினும், செய்தி ஊடகங்களில் வெளியான உண்மையான காட்சிகளிலும் அவர் அதே பதிவெண் கொண்ட காரில்தான் பயணித்தார் என்பது உறுதிசெய்யப்பட்டு, தற்போது அது சர்ச்சையாக மாறியுள்ளது.

மத்திய அரசின் 'Parivahan' இணையதளத்தில் 'TN 07 CM 2031' என்ற குறிப்பிட்ட அந்தப் பதிவெண்ணைச் சோதித்துப் பார்த்தபோது, அது 'Honda Dio' என்ற இருசக்கர வாகனத்திற்குரிய எண் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைப் போலிப் பலகையாகப் பொருத்திய காரில் திருமாவளவன் பயணித்தாரா அல்லது அவரது கட்சியினர் அத்தகைய காரில் அவரை அழைத்து வந்தனரா என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த காரின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்தும், போலிப் பதிவெண்ணைப் பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.