தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்டப்பேரவையில் பேசியபோது, முதலமைச்சர் விஜயுடனான தனது நீண்டகால நட்பு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதலமைச்சர் விஜயுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகி வருவதாகவும், அவரது அரசியல் பயணத்தையும் நீண்ட காலமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி, மதம், பணம் உள்ளிட்ட எந்த காரணிகளும் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை என்றும் கூறினார்.
தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 7 சதவீதம் வரையிலான வாக்குகளை மட்டுமே பெறும் என பல்வேறு தரப்பினர் கூறியதாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை மாற்றியமைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து, தியாகராய நகர் தொகுதியில் தான் நான்கு நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும், தன்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதனிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்க்கார்’ திரைப்படத்தைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சையையும் அமைச்சர் என்.ஆனந்த் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
‘சர்க்கார்’ திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையிலும், அதிமுக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அப்போது சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் திரையரங்குகள் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், திரைப்படத்தின் பேனர்கள் மற்றும் விஜய்யின் கட்-அவுட்களையும் சேதப்படுத்திய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
அதிமுகவினரின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, ‘சர்க்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த விவகாரம் அப்போது தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அந்த சம்பவத்தை தற்போது நினைவுகூர்ந்த அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனக் கூறினார். அவரது இந்த பேச்சு சட்டப்பேரவையில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயுடன் தனக்கு உள்ள நீண்டகால நட்பை சுட்டிக்காட்டியதுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலத்தில் ‘சர்க்கார்’ திரைப்படத்திற்கு எதிராக அதிமுகவினர் நடத்திய போராட்டத்தையும் தற்போதைய அரசியல் சூழலுடன் இணைத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ‘சர்க்கார்’ பேனர்களை அதிமுகவினர் கிழித்த சம்பவத்தை நேரடியாக சுட்டிக்காட்டி, அதனால் ஏற்பட்ட அரசியல் தாக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், ‘சர்க்கார்’ திரைப்பட பேனர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்த இந்த கருத்து அரசியல் களத்தில் புயலை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7