சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூன் 22) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நியாயங்களை தொடர்ந்து மத்திய அரசிடமும், பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமும் வலியுறுத்தி வருகிறோம்.
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
மேகதாது அணை விவகாரம் என்பது காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்வு வழங்கிய பிரச்சினைகளில் ஒன்று அல்ல. இது உச்சநீதிமன்றத்தால் இன்னும் தீர்மானிக்கப்படாத புதிய பிரச்சினையாகும். எனவே மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின் அடிப்படையில், புதிய நடுவர் மன்றத்தை அமைப்பதே சிறந்த வழி என மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், நதிநீர் வல்லுநர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதன்படி, மேகதாது விவகாரத்திற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு கடந்த மார்ச் 4, 2026 அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது. புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டாலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அந்தத் தீர்ப்பை மீண்டும் மறுபரிசீலனை செய்யவும் முடியாது.
புதிய நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், அது தமிழக அரசின் முடிவாகும். தமிழ்நாட்டு மக்களின் நலன், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் காவிரியின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருந்தாலும், மேகதாது விவகாரம் அரசியல் சார்ந்தது அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி இந்த முடிவைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதனடிப்படையில்தான் கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது" என்றார்.

LIVE 24 X 7