சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் தொடர்புப்படுத்தி பேசியதாக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மேல் 9 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலை முதலே நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அவரை திமுக தொண்டர்களின் எதிரொலியுடன் போலீசார் கைது செய்து வழக்கு பதியப்பட்ட தஞ்சாவூர், செங்கிபட்டி காவல் நிலையத்திற்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் போன்ற முக்கிய அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
அதன்பின், உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை என்றும், விசாரணை முடித்துவிட்டு உடனே விடுவித்துவிடுவோம் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு தரப்பு கூறியதுப்போலவே உதயநிதி இரவே விசாரணையை முடித்து விட்டு விடுதலை செய்யப்பட்டார். செங்கிபட்டி காவல் நிலையத்தில் இருந்து அலைகடலென திரண்டிருந்த திமுக தொண்டர்களின் நடுவே ரோட்ஷோ சென்றார்.
திருச்சி விமானநிலையம் வந்தடைந்த அவர் கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன், கடந்த ஆட்சியில் தண்ணீர் முறையாக வந்தது என்றும் மீண்டும் காவிரிக்கு இந்த ஆண்டு தண்ணீர் வரவில்லை என்றும்தான் நான் பேசினேன்" என்று கூறினார்.
பிறகு அவர்மீது சுமத்தப்பட்ட பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக போடப்பட்ட பழிக்கு பதிலளித்த அவர் " எனக்கு திருமணமாகி ஒரு மனைவி இருக்கிறார், அவருடன்தான் வாழ்ந்து வருகிறேன், எனக்கு ஒரு பொண்ணு இருக்கு, எனக்கு ஒரு தங்கை இருகாங்க. என்னோட அப்பா, அம்மா, குடும்பம் என்ன அப்படி வளர்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மாரும் எனக்கு குடும்பம்தான்" என்று பதிலளித்தார்.
பின்னர் கரூர் சமபவத்தை பற்றி பேசிய அவர் " கரூரில் 41 பேர் பலியான நேரத்தில் இதே விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் புறமுதுகு காட்டி ஓடிய நம்பர்.1 ஓடுகாலி முதலமைச்சர் அவர்" என முதலமைச்சர் விஜய்யை மீண்டும் விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி இந்த அரசை பற்றி "நான் பேசாத ஒன்றை CUT, COPY செய்து பரப்பியுள்ளனர். இந்த கைதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. இன்னும் 100 முறை பேசுவேன்.. மீண்டும் மீண்டும் பேசுவேன்..! இதையெல்லாம் ஒரு ஆட்சியாகவே நான் பார்க்கவில்லை.. சர்கஸ் கூடாரமாக தான் பார்க்கிறேன்" என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறும் நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கை பிரதிபலிக்குமா என அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

LIVE 24 X 7