அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன்
அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி, “பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது, அதிமுகவிற்கு ஏதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.
நாங்கள் சொல்வதைக்கேட்டால் உங்களுக்கு தேவையானதை செய்வோம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னை தனிமை சிறையில் அடைத்து என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன்.அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன்.சிறைக்குள் சிறை என தனிமைச்சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.
யாரிடமும் பணம் வாங்கவில்லை
சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது.எதற்கும் நான் அஞ்சவில்லை. கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், யார் என்ன சொன்னாலும், நான் சிவகாசியில் தான் போட்டியிடுவேன். என்னை இரு முறை அமைச்சராக்கிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார்.
LIVE 24 X 7









