அரசியல்

விஜய்க்கு கூடும் ஆதரவு: களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.

விஜய்க்கு கூடும் ஆதரவு: களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்!
CPI & CPIM
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவித்து வந்தது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை உறுதி செய்திருந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகளும் தவெக-விற்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது அக்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

இடதுசாரி கட்சிகளின் இந்த ஆதரவு முடிவைத் தொடர்ந்து, தவெக-வின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மை இலக்கை அடைய இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கட்சியின் இறுதி முடிவு நாளை காலை அறிவிக்கப்பட உள்ளது.