தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது பெரும் சூடுபிடித்துள்ளது. அங்குத் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா, காவல்துறை பாதுகாப்புடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்குத் தொகுதி மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் சத்யபாமா தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்ட அதிமுக தொண்டர்களும் பகுதி மக்களும், "உங்களுக்கு வாக்களித்த மை காய்வதற்குள் அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சிக்குச் சென்றுவிட்டீர்களே" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.
மேலும், ரூ.50 கோடி பெற்றுக் கொண்டுதான் தவெகவில் இணைந்ததாகக் குற்றம்சாட்டிய மக்கள், "நீங்கள் வெற்றிபெற்ற போது வெடிவெடித்துக் கொண்டாடிய எங்களுக்கு இப்போது என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" எனப் பேசவிடாமல் தடுத்துக் கொதித்தெழுந்தனர்.
மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சத்யபாமா, "அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைக்க முயன்றதால் தான் நான் தவெகவுக்கு வந்தேன்" என்று விளக்கமளித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள், அதற்கு உடனடியாக ஆதாரம் தருமாறு கேட்டு மேலும் நெருக்கடி கொடுத்தனர்.
வாக்குச் சேகரிப்பு வேனில் சத்யபாமா பிரச்சாரம் செய்தபோதும் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதனால் வேறுவழியின்றி தவெக நிர்வாகி ஒருவர், மைக்கில் "விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள், மற்றவர்கள் உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள்; எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று ஆதங்கத்துடன் கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களுடனான இந்த முரணால், தவெக நிர்வாகிகள் மத்தியில் தோல்வி பயம் மேலோங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி தாராபுரத்தில் பிரம்மாண்ட 'ரோடு ஷோ' நடத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஒன்றில் தோற்றால் கூட, அது கட்சியின் பிம்பத்தைப் பாதிக்கும் எனக் கருதும் தவெக தலைமை, இரு தொகுதிகளையும் கைப்பற்றத் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

LIVE 24 X 7