தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக கடந்த ஒரு மாதமாகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது பிரசார களைப்பைப் போக்கிக் கொள்ளத் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்லத் திட்டமிட்டுள்ளார். இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வழக்கமான கொடைக்கானல் பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு தேர்தலுக்கும் பிறகு கொடைக்கானல் சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்பும் அவர் அங்குச் சென்றிருந்தார். தற்போது சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், பிரசாரப் பணிகள் நிறைவடைந்துள்ளதாலும் நாளை (ஏப். 25) அவர் கொடைக்கானல் செல்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால், இந்த விடுமுறையை அவர் அங்கு கழிக்கவுள்ளார்.
துபாய் சென்ற உதயநிதி ஸ்டாலின்
மற்றொரு புறம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தனது மனைவியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான அரசியல் மற்றும் பிரசாரப் பணிகளில் இருந்த அவர், சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காகத் துபாய் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

LIVE 24 X 7