தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசி, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் (FIR) அதிர்ச்சியூட்டும் முக்கிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கரூரில் கைதான திமுக பிரமுகர்கள் இருவர் நள்ளிரவில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 'IPDS' என்ற பெயரில் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர், தனக்குத் தொலைபேசி வாயிலாக அறிமுகமாகிப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். "உங்களை எனக்கு நன்றாகத் தெரியும், ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த நபர்கள் சொன்னதன் பேரில் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் போது நாங்கள் சொல்லுவது போல் நீங்கள் நடந்து கொண்டால் போதும், உங்களுக்கு ரூ.35 கோடி கிடைக்கும்" என்று திருநாவுக்கரசு ஆசை வார்த்தை கூறிப் பேரம் பேசியுள்ளார்.
திருநாவுக்கரசின் இந்த பேரத்திற்கு, "எனக்கு இதில் விருப்பமில்லை, இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்" என்று எம்.எல்.ஏ இளையராஜா கறாராக மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, "நீங்க கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துருக்கீங்க, உங்களால் இவ்வளவு பெரிய தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாங்கள் சொல்வது போல் நடந்தால் தான் உங்களுக்கும் குடும்பத்திற்கும் நல்லது; இல்லையேல் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று மிரட்டியுள்ளார். மேலும், "நான் பேசியதைப் பற்றி யாரிடமாவது சொன்னால், நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்" என்றும் தவெக எம்.எல்.ஏ-வுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் கூட்டுச்சதி, கொலை மிரட்டல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில், அசோக் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூரில் நள்ளிரவில் கைதான திமுக பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் தற்போது தனித்தனியாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LIVE 24 X 7