தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் அருண் சிங்கை நேரில் சந்தித்து அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, "இது நம்ம இயக்கம்" என்ற புதிய அரசியல் இயக்கத்தை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த இயக்கம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி அண்ணாமலை பக்கம் சாய்ந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
"முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்" – அண்ணாமலை அதிரடி!
புதிய இயக்கத்தை அறிவித்து பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் குறித்து சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்:
”இந்த இயக்கம் விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தங்களது பலத்தைக் காட்டும். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ (Common Man) அரசியலை முன்னிறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும், புதியவர்களை அரசியலுக்குக் கொண்டு வரவும் கோவையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த பயிற்சி மையத்தில் இருந்து தகுதியான பல வேட்பாளர்களை நாம் களம் இறக்குவோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் நிர்வாகிகள்: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!
அண்ணாமலையின் "இது நம்ம இயக்கம்" என்ற அறிவிப்புக்கு மக்கள்மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில், பாஜகவில் இருக்கும் அண்ணாமலையின் ஆதரவாளர்களை அவர் ‘ஸ்கெட்ச்’ போட்டு தனது இயக்கத்திற்கு இழுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கு முன்னதாக, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி உள்ள நிலையில், பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, இன்று பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.
இவர்கள் தவிர மேலும் பல்வேறு முக்கிய மாவட்ட, மாநில நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கதிகலங்கும் கமலாலயம்... பாஜகவின் அடுத்த பிளான் என்ன?
தொடர்ச்சியாக அண்ணாமலையின் ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கட்சியை விட்டு வெளியேறி வருவதால், தமிழக பாஜக தலைமையகமான கமலாலய வட்டாரம் என்ன செய்வதென்று தெரியாமல் கதிகலங்கிப் போயுள்ளது.
அண்ணாமலையின் இந்த அதிரடி நகர்வுகளைச் சமாளிக்கவும், கட்சியில் இருக்கும் மற்ற இளைஞர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும், பாஜகவில் புதிய இளம் தலைவர்களை முக்கியப் பதவிகளில் நியமிக்க டெல்லி மற்றும் தமிழக தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் அண்ணாமலையின் இந்த புதிய ஆட்டம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? பாஜகவின் அடுத்த கட்ட மூவ் என்ன? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LIVE 24 X 7