அரசியல்

தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!
AI Image
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?

Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.