தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நீடிக்கும் காவிரி பிரச்சினை:
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழக தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீர்ப்பங்கீட்டு விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்தச் சந்திப்பு கடந்த 3-ம் தேதி நடைபெற இருந்தது.
திடீரென ஏற்பட்ட பரபரப்பு:
ஆனால், முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள சில கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. விஜய்யின் திரைப்பட பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
இதையடுத்து, விஜய் கர்நாடகாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இரு தலைவர்களின் சந்திப்பும் நடைபெறாமல் போனது.
சென்னையில் மீண்டும் சந்திப்பா?
இந்த நிலையில், அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டி.கே.சிவக்குமார் நாளை இரவு சென்னை வருகிறார். மாநாடு நடைபெறும் கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்க உள்ளார் எனவும், மறுநாள் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சென்னை வரும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேச டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பு நடைபெற்றால், காவிரி நீர் திறப்பு, மேகதாது அணை திட்டம் மற்றும் இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு:
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு தொடர்ந்து உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நீர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இரு மாநிலங்களின் மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில் விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடைபெற்றால், பேச்சுவார்த்தையின் மூலம் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது அரசியல் மற்றும் நீர்வள வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் நடந்த சந்திப்புகள்:
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர்கள், கர்நாடக முதலமைச்சர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், 1997-ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அப்போதைய கர்நாடக முதலமைச்சர் ஜே.எச்.பாட்டீலை சந்தித்துப் பேசினார்.
அதேபோல், 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரையும் சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகும் காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இதை சுட்டிக்காட்டியே, முதலமைச்சர் விஜய் டி.கே.சிவக்குமாரை சந்திப்பது எந்த அளவுக்கு பலன் தரும் என்ற கேள்வியை சில எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வர உள்ள டி.கே.சிவக்குமார் - முதலமைச்சர் விஜய் சந்திப்பு நடைபெறுமா? அப்படி நடைபெற்றால் காவிரி விவகாரத்தில் இரு தரப்பினரும் என்ன முடிவை எடுப்பார்கள்? என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

LIVE 24 X 7