K U M U D A M   N E W S

ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

அவசர அவசரமாக ஆற்றில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பெண் மீது கொடூர தாக்குதல்.. தலைமறைவானவரை பிடிக்க போலீஸ் வலை வீச்சு

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே தனது ஆட்டோவில் பயணித்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 4.5 சவரன் நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உள்ள ராமநாதன் என்பவரை தேடி வருகின்றனர்,

மகளிர் படையுடன் தொடங்கியது விசிகவின் மதுவிலக்கு மாநாடு!

விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

டெல்லியில் இதுவரை இல்லாத அளவு 560 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரே ஒன்று திரண்டு கொண்டாட்டம்.. மன்னர் உடைவாள் கேரள அரசிடம் ஒப்படைப்பு

தமிழக, கேரள எல்லையான களியாக்கவிளையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மன்னர் உடைவாள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாம்சங் விவகாரம்... கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன. 

“இரவில் நடக்கும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை” - சட்டத்துறை அமைச்சர் பதில்

இரவில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கத்தை குறைசொல்லக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி

நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். 

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

மருத்துவனையில் சிகிக்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். 

100 நாள் வேலை... பெண்கள் எடுத்த திடீர் முடிவு..

திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிக்கிய கஞ்சா.. சம்பவம் செய்த போலீஸ்...

போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஜிவி பிரகாஷின் 700வது பாடலாம்...’அமரன்’ படத்தின் அடுத்த அப்டேட்...!

அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!

இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா

துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிராமசபைக் கூட்டத்தில் மோதல்; கலவரமான கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குளாங்குறிச்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் கிராமத்தினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 1௦ மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் Passenger-ஐ பந்தாடிய TTR.. பரபரப்பு காட்சிகள்

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.