K U M U D A M   N E W S

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்தியாவில் குரங்கம்மை? வெளிநாட்டில் இருந்து வந்த அந்த நபர்...மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தவெக-வுக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடி கொளுத்திய தவெக-வினர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்துக்கொண்டதை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தவெக கட்சியினர்

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

"Late -ஆ வந்தாலும் Latest-ஆ இருக்கு.." - முதல்வரின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன். ஆனால் வரவேற்பு Latest-ஆக உள்ளது என சிகாகோவில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம்'.. நடிகை ரோகிணி பரபரப்பு பேச்சு!

''திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 2019ம் ஆண்டே கமிட்டி அமைக்கப்பட்டது'' என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

''தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும்..?'' - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீர் பிரச்சனை குறித்து தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

JUSTIN | கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பூண்டி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

சீமான் போல்தான் விஜய்க்கும் நடக்கும்.. அடித்து சொன்ன அரசியல் விமர்சகர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்துக்கொண்டது குறித்து அரசியல் விமர்சகர் துரைகண்ணா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்

கமலுக்கு இல்லாத துணிச்சல் விஜய்க்கு உள்ளது.. ஆனாலும் மன்னிக்க முடியாது - எச்சரிக்கும் பாஜக பிரமுகர்

கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது என்றும் "கோட்" படத்தில் சுபாஷ் சந்திரபோஷ் குறித்து தவறாக சித்தரித்ததை மன்னிக்க முடியாது என்றும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

BREAKING | தவெக மாநாடு நடத்த - 33 நிபந்தனை.. - என்ன காரணம்..? உடைந்த ரகசியம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் காவல்துறை அனுமதியளித்துள்ளனர்.

BREAKING | 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்க நிர்வாகம் தொடரும்

நடிகர் சங்க கட்டட பணிகளை கருத்தில் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் தொடரும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'இனி அமைதியாக இருக்க மாட்டோம்'.. பொதுக்குழு கூட்டத்தில் நாசர் ஆவேசம்.. என்ன விஷயம்?

''நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்கிறார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிதி திரட்ட உதவுகிறார்கள்'' என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

BREAKING | 14 மீனவர்களுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்.20 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு

BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்

தீபிகா - ரன்வீர் வீட்டில் குட் நியூஸ்.. என்ன குழந்தை தெரியுமா?

நடிகை தீபிகா – ரன்வீர் சிங் இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இணையத்தை வாழ்த்து மழையால் நிரப்பி வருகின்றனர். 

மகாவிஷ்ணுவுக்கு அனுமதி கொடுத்தது யார்..? புயலை கிளப்பிய பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha on Mahavishnu: சர்ச்சையான மதச் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்காக இணைந்து நடிக்கும் ரஜினி, கமல்... 'அந்த ஒரு கோடி' விஜய்க்கு நன்றி தீர்மானம்!

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Mansoor Ali Khan: “நான் உத்தமன் இல்லை... படுக்கைக்கு அழைத்தால் செருப்பால் அடி..”: மன்சூர் அலிகான்

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற 68வது நடிகர் சங்கர் பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.

LIVE: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் !

South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபலங்கள்

#BREAKING || நினைத்தது கிடைத்தது.. கொண்டாடும் தவெக தொண்டர்கள்!

TVK Party: தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்.

TVK Vijay: தவெக அரசியல் கட்சியாக அங்கீகாரம்... மாநாடு தேதியை அறிவிக்காத விஜய்..? தொண்டர்கள் குழப்பம்

தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாநாடு குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காதது தவெக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING | "தவெக-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது"

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.