பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவருமான கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 17-ஆம் தேதி மாலை, தயாரிப்பாளர் கே.ராஜன் தனது காரில் அடையாறு திரு.வி.க. மேம்பாலத்திற்கு வந்துள்ளார். பின்னர், நடைபயிற்சி செல்வதாகக் கூறிவிட்டு திடீரென அடையாறு ஆற்றில் குதித்து விபரீத முடிவு எடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அடையாறு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.20 கோடி பண மோசடிப் புகார்
சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்காகத் தொடர்ந்து மேடைகளில் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த கே.ராஜன், சில தயாரிப்பாளர்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார், யாரிடம் ஏமாந்தார் என்பது குறித்த விவரங்களை ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளதாகக் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் தீவிர விசாரணை
கே.ராஜனின் செல்போனைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவரது தற்கொலைக்கான பின்னணி குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மற்றவர்களிடம் கடனாகப் பணம் வாங்கி, சில தயாரிப்பாளர்களுக்குக் கே.ராஜன் உத்தரவாதம் கொடுத்துப் பணத்தைப் பெற்றுத் தந்தாரா என்ற சந்தேகத்தின் பேரிலும், அவரை யாராவது தற்கொலைக்குத் தூண்டினார்களா என்ற கோணத்திலும் டைரி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

LIVE 24 X 7