சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரை விடுதிக்கு வரவழைத்து நிர்வாணப் புகைப்படம் எடுக்க முயன்ற சினிமா தயாரிப்பாளர் மற்றும் இரு பெண்களை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
போட்டோ ஷூட் என்ற பெயரில் மிரட்டல்
சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் சின்னத்திரை நடிகை ஒருவரை, சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க வைக்க போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் எனக் கூறி, சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதிக்கு நடிகையை வரவழைத்துள்ளார்.
அங்கு சென்ற நடிகையிடம், கதையில் சாமி வேடம் வருவதால் உடலில் தழும்புகள் ஏதும் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் எனக் கூறி, கண்களை மூடிக்கொண்டு ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்குமாறு அங்கிருந்தவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, நடிக்க மறுத்து அங்கிருந்து தப்பியோடி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கை
நடிகையின் புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விடுதியில் இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பெருங்குடியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் (65), தரமணியைச் சேர்ந்த இந்திராணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கார்த்திகா என்பது தெரியவந்தது.
போலீசார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்த 7 வயது சிறுமி மீட்கப்பட்டு, அடையாறில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LIVE 24 X 7