K U M U D A M   N E W S

பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. போராட்டத்தில் குவித்த வியாபாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!

ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் இணைய சேவை நிறுத்தம்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில் ஒரே வாரத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவைகளை முடக்கி அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது 

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! - தலைவர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

“வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு!” - அண்ணாமலை இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆதார் சேவை மையத்தில் குவிந்த மக்கள்

மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Vellaiyan : வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்.. 2 நாட்கள் கடையடைப்பு

T Vellaiyan Passed Away in Chennai : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்றுக் காரணமாக காலமானார். 2 நாட்கள் கடைகளை அடைத்து துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

த.வெ.க. மாநாடு தள்ளிப்போகிறதா..?

விழுப்புரம் மாவட்டம் விக்கிராண்டியில் செப்.23ம் தேதி த.வெ.க. மாநாடு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி த.வெ.க.வின் முதல் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது 

விசிக அழைத்து அதிமுக சென்றால் நல்லது தான் - மா.சுப்பிரமணியன் அதிரடி

விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு அழைப்பு - கூட்டணிக்கு அடித்தளமா? வைகைச்செல்வன் கருத்து

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்புவிடுத்ததை பற்றி வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்

'போராட்டத்தை விட்டு பண்டிகையை கொண்டாடுங்கள்'.. மமதா பானர்ஜியின் பேச்சால் சர்ச்சை!

''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருமா எடுத்த முடிவு.. இறங்கி அடிக்கபோகும் விசிக"கூட்டணி..?" - பிரஸ் மீட்டில் பகீர்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

"பல முறை சொல்லிட்டோம் - இந்த முறை இறங்கிட்டோம்.."உச்சி வெயிலில் கத்திய கூட்டம்

திருவாரூர் பைங்காட்டூர் கிராமத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். சுமார் 35,000 ஏக்கர் விளை நிலங்களின் பயிர்கள் கருகி வருவதாக தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

BREAKING | போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் - அரசு வைத்த செக்

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

BREAKING || ஹேமா கமிட்டி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது