மேஷம்:
நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம்க. அலுவலகத்துல எண்ணம்போல ஏற்றம் ஏற்படும்க. உங்க பொறுப்புகளை மூன்றாம் நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்க. முயற்சிகள்ல சோம்பல் கூடாதுங்க. புறம்பேசுவோரைத் தவிர்த்தாலே உங்க உயர்வுகள் உறுதியாகும்க. வீட்டுல விட்டுக் கொடுத்தல் அவசியம்க. வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும்க.
பணவரவு அதிகரிச்சாலும் செலவுகளும் சேர்ந்து வரும்க. குடும்ப ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்துக்க வேண்டாம்க. செய்யும் வர்த்தகத்துல வளர்ச்சி ஏற்படும்க. தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள்ல அலட்சியம் கூடாதுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க முகஸ்துதி நபர்களால வீண்பழி ஏற்க நேரிடலாம், கவனமா இருங்க, வாகனத்துல சிறுபழுது இருந்தாலும் உடனே சீர் செய்யுங்க. தூக்கமின்மை, அஜீரண உபாதைகள் வரலாம்க. பைரவரை வணங்குங்க. வாழ்க்கை பசுமையாகும்.
ரிஷபம்:
அனுகூலமான காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமை பளிச்சிடும்க. சிலருக்கு இடமாற்றத்துடனான பதவி உயர்வு வந்து சேரலாம்க. தவிர்க்க வேண்டாம்க. குடும்பத்துல குதூகலம் குடிபுகும்க. பெரியவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. தால், பெறலை உடனுக்குடன் குறிச்சுவைங்க.
அரசு, அரசியல் சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன் தரும் முன் யோசித்து செயல்படுங்க. மாணவர்கள் மனம்போல உயர்வுகளைப் பெறலாம்க. பெற்றோர் வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் குடுங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. பரம்பரைத் தொழில்ல புதிய மாற்றம் நல்லதுங்க. பங்குவர்த்தகத்துல முதலீடு வேண்டாம்க. பயணத்துல கவனச் சிதறல் கூடாதுங்க. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. துர்க்கையைத் துதியுங்க. உங்க வாழ்க்கை துளிர்க்கும்.
மிதுனம்:
முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல திட்டமிட்டு செயல்பட்டா, உங்க திறமை பேசப்படும்க. உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்க, வீட்டுல நிம்மதி நிலவும்க. வாழ்க்கைத் துணையால் பெருமை ஏற்படும்க. வாரிசு பாக்யத்தின் அறிகுறி தெரியும்க. பூமியால் ஆதாயம் கிட்டும்க. அசையும், அசையா சொத்து சேரும்க. வர்த்தகத்தில் பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்க.
கூட்டுத் தொழில்ல புதிய ஒப்பந்தம் ஏற்படும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க சிலருக்கு பதவி, பொறுப்பு உயரும்க. புறம்பேசுவோரை புறம்தள்ளுங்க. வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்க. வளர்ப்பு பிராணிகளிடமிருந்து விலகியே இருங்க. நரம்பு, ரத்தநாள உபாதைகள் வரலாம்க. புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வாங்க. வாழ்க்கை புதுமலர்ச்சி பெறும்.
கடகம்:
தொட்டது துலங்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல ஏற்றமும் மாற்றமும் வரும்க. உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. சிலர் முதன் முறையாக வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் அமையும்க. வீட்டுல விசேஷங்கள் வரும்க. குடும்பத்துல நிம்மதி நிலவும்க. விலகி இருந்த உறவுகள் திரும்பி வரும்க. குலதெய்வ வழிபாட்டுக்கு சந்தர்ப்பம் அமையும்க.
வர்த்தகம் வாணிபத்துல வளர்ச்சி அதிகரிக்கும்க. முழுமுயற்சி இருந்தா, அரசுவழி அனுமதிகள் நிச்சயம் கிட்டும்க. மாணவர்கள் திறமை பளிச்சிடும்க. சோம்பலை விரட்டினா, சாதனைகள் செய்யலாம்க. அரசு, அரசியல்ல இருக்கறவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு வரும்க. தொலைதூரப் பயணத்துல போதுமான ஓய்வும் முக்கியம்க. கண்கள், பல் உபாதைகள் வரலாம்க. நரசிம்மரை வணங்குங்க. நல்லதே நடக்கும்.
சிம்மம்:
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்க. அலுவலகத்துல பதவி, இடமாற்ற முயற்சிகள் பலன் தரும்க. செயல்கள்ல நிதானமும் நேரடி கவனமும் இருந்தா நிச்சயம் மேன்மைகள் வரும்க. குடும்பத்து வசந்தகாலம் வரும்போது கசந்த வார்த்தைகளை பேசாம இருக்கறது அவசியம்க. சுபகாரியங்கள்ல வீண் வாக்குவாதம் தவிருங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. அரசு, அரசியல்ல உள்ளவங்க, ரகசியங்கள் எதையும் பிறரிடம் பகிர்ந்துக்க வேண்டாம்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. அயல்நாட்டு வர்த்தக தஸ்தாவேஜுகளை பத்திரமா வைச்சுக்குங்க. மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் நிச்சயம் கைகூடும்க. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. அடிவயிறு, மூட்டு உபாதைகள் வரலாம்க. சிவன் பார்வதியை வழிபடுங்க. வாழ்க்கை சிறக்கும்.
கன்னி:
கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணிகள் எதிலும் நேரடி கவனம் அவசியம்க. பணிசார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம்க. புலம்பாம ஏற்றுகிட்டா, அது ஆதாயமாகவே இருக்கும்க. வீட்டுல வீண் வாதம் தவிர்த்தா, நிம்மதி நிலவும்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. வரவை சேமிக்கப் பழகுங்க. பெற்றோர் ஆலோசனைகளைக் கேளுங்க.
வீண் வாக்குறுதிகளைத் தவிருங்க. மாணவர்கள் கேளிக்கை நாட்டம் தவிருங்க. அரசியல், அரசு சார்ந்தவங்களுக்கு வீண் ரோஷமும், வெட்டி ஜம்பமும் கூடாதுங்க. செய்யும் தொழில்ல முடக்க நிலை மாறும்க. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துல தகத்துல சட்டமீறல் சட்டமீறல் எட்டிப்பார்க்காம கவனமா இருங்க. பயணப்பாதையில பிறர்தரும் உணவை ஏற்க வேண்டாம்க. கழிவு உறுப்பு, வயிறு உபாதைகள் வரலாம்க. கணபதியைக் கும்பிடுங்க. களிப்பு நிறையும்.
துலாம்:
உயர்வுகளும் உன்னதமும் உருவாகக் கூடிய காலகட்டம்க. பணியிடத்தில் உங்க திறமைகள் உயரதிகாரிகளால் உணரப்படும்க. பதவி, ஊதியம் உயரும்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. விலகி இருந்த உறவும் நட்பும் திரும்ப வரும்க. தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்க. சுபதடைகள் நீங்கும்க. பணவரவு சீராகும்க. வீடு, மனை, வாகன யோகம் உண்டுங்க.
செய்யும் தொழில்ல வளர்ச்சி ஏற்படும்க. அயல்நாட்டு வர்த்தகம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அமைதி அவசியம்க. வீண்ஜம்பத்துக்கு வாக்குறுதிகள் தரவேண்டாம்க. மாணவர்கள் சோம்பலை விரட்டணும்க. வாகனத்தை நிதானமா செலுத்துங்க. வாயைக் கட்டுப்படுத்தினாலே நோயை தவிர்க்கலாம்க. அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம்க. இஷ்டப்பட்ட அம்மனை வணங்குங்க. எண்ணங்கள் ஈடேறும்.
விருச்சிகம்:
முயற்சிகள் பலன்தரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டா, ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும்க. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம்க.
இல்லத்துல இன்சொல் முக்கியம்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்க. அக்கம்பக்கத்துல அதிக நெருக்கம் வேண்டாம்க. தாய்வழி உறவுகள் உடல்நலத்துல கவனம் செலுத்துங்க.
செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துல சுணக்கம் நீங்கும்க. எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிட்டும்க. மாணவர்களுக்கு மன ஒருமைப்பாடு முக்கியம்க. அரசு, அரசியல் துறையினர்க்கு பொறுமைதான் நல்லதுங்க. ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிருங்க. பயணத்துல உடைமைகள் பத்திரம்க. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. ஷண்முகனைக் கும்பிடுங்க, சந்தோஷம் நிறையும்.
தனுசு:
எச்சரிக்கையாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல அவசரமும் அலட்சியமும் கூடாதுங்க. கோப்புகள்ல கையெழுத்திடும்போது கவனமா இருங்க. குடும்பத்துல நிம்மதி நிலவும்க. சுபகாரியத் தடைகள் படிப்படியா விலக பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. தரல், பெறலை நேரடி கவனதோட செய்யுங்க. குடும்ப பிரச்னைகள்ல மூன்றாம்நபர் தலையீட்டைத் தவிருங்க.
செய்யும் தொழில்ல நேரடி கவனம் செலுத்துங்க. அயல்நாட்டு வர்த்தகத்துல சட்டத்துக்கு உட்பட்டே எதையும் செய்யுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மேலிடத்தை விளையாட்டாகவும் கேலி செய்ய வேண்டாம்க. முகஸ்துதி நபர்களை விலக்குங்க. மாணவர்கள் தினமும் சிறிது நேரமாவது தியானம், யோகா பழகறது நல்லதுங்க. இரவுப் பயணங்களை இயன்றவரை தவிருங்க. ஒற்றைத் தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம்க. மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. வாழ்க்கை மணக்கும்.
மகரம்:
சந்தோஷம் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க, அலுவலகத்துல உங்க செல்வாக்கு அதிகரிக்கும்க. மேலிடத்து ஆதரவு கிட்டும்க. பிறரால் பழி ஏற்றிருந்த சூழல் மாறும்க. குடும்பத்துல வசந்தம் வரும்க. வரவு அதிகரிக்கும்க. வீடு, வாகனம், பொருள் சேரும்க. உறவுகள் வருகை மகிழ்ச்சி தரும்க. செய்யும் தொழில்ல ஆதாயம் அதிகரிக்கும்க. சிலருக்கு புதிய தொழிலமைப்பு மாற்றம் ஏற்படக்கூடும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பதவி, பாராட்டுகள் கிட்டும்க. உடனிருப்போர் ஆதரவு கிட்டும்க.
செல்வாக்கு அதிகரிக்கும் சமயத்துல சொல்வாக்குல கவனமா இருக்கணும்க. மாணவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் உருவாகும்க. எண்ணம்போல் கல்வி, வேலை வாய்ப்புகள் கைகூடும்க. நெடுந்தூரம் செல்லும்போது முறையான ஓய்வும் முக்கியம்க. மூட்டு, நரம்பு, முதுகு உபாதைகள் வரலாம்க. அங்காளம்மனைக் கும்பிடுங்க. ஆனந்தம் நிலைக்கும்.
கும்பம்:
பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்க. வேண்டாத ரோஷமும், வெட்டிக் கோபமும் தவிர்க்கணும்க. வீட்டுல விசேஷங்கள் வரும்போது, உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. ஆடம்பரக் கடன்களை தவிருங்க. வாரிசுகளிடம் கடுமை கூடாதுங்க. வரவை சிறிதளவாவது சேமிக்கப் பழகுங்க.
செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்க. அயல்நாட்டு வர்த்தக தஸ்தாவேஜுகளை பத்திரமா வைச்சுக்குங்க. மாணவர்கள் இரவு நேரத்துல வெளியிடங்கள்ல தங்குவதை தவிருங்க. அதிகாலைப்படிப்பை வழக்கமாக்குங்க. அரசு, அரசியல் துறையினர் அடக்கமா செயல்படணும்க. சட்டவிரோட நட்புகளுக்கு இடம்தர வேண்டாம்க. இரவுப் பயணத்துல எச்சரிக்கையா இருங்க. கண், பற்கள், மூட்டு உபாதைகள் வரலாம்க. ரங்கநாதரைக் கும்பிடுங்க. வாழ்க்கை ரம்யமாகும்.
மீனம்:
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணிகள்ல பொறுப்பும் திட்டமிடலும் இருந்தா ஏற்றமும் மாற்றமும் உறுதியாகும்க. உயரதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. சிலருக்கு புதிய வேலை வாய்ப்பும் அதனால ஏற்றமும் உருவாகும்க. இல்லத்துல இனிமை நிலவும்க. விசேஷங்கள் படிப்படியா வரத்தொடங்கும்க. உறவுகளிடையே உங்க செல்வாக்கு உயரும்க.
எதிர்பால் நட்புகளிடம் எல்லைவகுத்துப் பழகுங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனம் அவசியம்க. வர்த்தகக் கடன்கள்ல வீண் செலவு வேண்டாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. மேலிடத்து அனுமதி இல்லாம திட்டம் எதையும் செயல்படுத்த வேண்டாம்க. மாணவர்களுக்கு மனம்போல ஏற்றமும் மாற்றமும் வரும்க. பயணத்துல வேகம் தவிருங்க. கொழுப்புசத்து அதிகரிப்பு, இடதுபாக உபாதைகள்ல கவனமா இருங்க. அனுமனை ஆராதியுங்க. ஆனந்தம் நிறையும்.
LIVE 24 X 7








