இன்று உங்கள் ராசிக்கு நல்ல நாளா? கெட்ட நாளா? முழு பலன்கள் இதோ!

இன்று உங்கள் ராசிக்கு நல்ல நாளா? கெட்ட நாளா? முழு பலன்கள் இதோ!

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களையும், நட்சத்திரப் பலன்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

Author: Bhavani v ஆன்மிகம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று எந்தச் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தாயின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் அமையும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! வழக்கமான பணிகளில்கூட கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படலாம். சகோதரர்களால் சில பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். பணியாளர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாளாக அமையும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலம் மேம்படும். அரசாங்கம் தொடர்பாக எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு உறவினர்கள் மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வரலாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக அலைச்சலும் சோர்வும் உண்டாகலாம். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இருப்பினும், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்ளலாம். அவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் அல்லது வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும். பணியாளர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்புள்ளது. சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் கையிருப்பில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கலாம். இதனால் சேமிப்புப் பணம் குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். தாய்மாமன் வழியில் செலவுகள் உண்டாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அலைச்சல் ஏற்படலாம். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று அனுகூலமான நாளாக அமையும். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் தொடர்பாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! அரசாங்கம் தொடர்பாக எதிர்பார்த்த காரியம் சிறு தாமதத்துக்குப் பிறகு நிறைவேறும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்கள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று எதிர்பாராத பணவரவு கிடைத்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் தொடர்பாக சுபச் செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.