இன்றைய ராசிபலன்! எதிர்பாராத பணவரவு முதல் குடும்ப மகிழ்ச்சி வரை...!

இன்றைய ராசிபலன்! எதிர்பாராத பணவரவு முதல் குடும்ப மகிழ்ச்சி வரை...!

இன்றைய ராசிபலனில் எந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு அதிகரிக்கப் போகிறது? யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி காத்திருக்கிறது? புதிய முயற்சிகளில் வெற்றி பெறப்போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்குமான இன்றைய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

Author: Santhosh V ஆன்மிகம்

மேஷம்

இன்று அவ்வப்போது மனதில் குழப்பங்களும் தேவையற்ற சிந்தனைகளும் தோன்றி மறையலாம். தாய்வழி உறவினர்களின் தேவைகளுக்காக எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் மனக்கவலையை ஏற்படுத்தலாம்.

ரிஷபம்

இன்று வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஏற்கெனவே கொடுத்த கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் படிப்படியாக விலகும். உறவினர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் தேவையற்ற செலவுகளும் தொடர்ந்து வரக்கூடும்.

மிதுனம்

இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைகள் முக்கியமான முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளைச் சமாளிக்கும் மனவலிமையும் சாதுர்யமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் வழக்கமான விற்பனையும் லாபமும் தொடரும். புதிய முயற்சிகளைத் திட்டமிடுவதற்கு ஏற்ற நாள்.

கடகம்

இன்றைய நாள் மனதிற்கு மகிழ்ச்சியையும் குடும்பத்தில் நிம்மதியையும் தரக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் முன்பு ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பாகச் சில சிறிய பிரச்னைகள் உருவாகி பின்னர் சரியாகும். தந்தைவழி உறவினர்களுக்காகச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். முக்கியமான விஷயத்தில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சிறிய குழப்பங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் சாதகமான முடிவுகளைத் தரக்கூடும். நீண்ட நாட்களாகத் தாமதமாகி வந்த சில காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன், மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். இருப்பினும் உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் கவனித்துக்கொள்வது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். தந்தையின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று மனதில் புத்துணர்ச்சியும் செயல்பாடுகளில் வேகமும் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் சிறிது அலைச்சலும் சோர்வும் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதால் லாபமும் உயரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

துலாம்

இன்று அனைத்து விஷயங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புதிய முயற்சிகளைத் தொடங்குவதையும் அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன், மனைவி இடையே நீடித்து வந்த மனக்கசப்புகள் மறைந்து உறவில் சுமுகமான நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லாமல் சுமாரான நிலையே காணப்படும்.

விருச்சிகம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சல் அதிகரிக்கலாம். தந்தையிடம் இருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அன்றாடப் பணிகளை அவசரப்படாமல் பொறுமையுடன் செய்து முடிக்கவும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு

இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு சீராக இருந்தாலும் திடீர் செலவுகள் காரணமாகச் சேமிப்பு குறைய வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் தொடர்பான காரியங்கள் எதிர்பார்த்ததைவிட தாமதமாக முடிவடையலாம். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாக இருக்கும். பணியாளர்களின் தேவைகளுக்காகக் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

மகரம்

இன்றைய நாள் பல்வேறு வகைகளிலும் சாதகமான பலன்களை வழங்கக்கூடும். சகோதரர்கள் பண உதவி கேட்டு நெருக்கடி கொடுக்கலாம். தந்தைவழியில் எதிர்பார்த்த ஆதரவும் உதவிகளும் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. செலவுகள் அதிகரித்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சூழல் அமையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கமான நிலையில் இருக்கும். வாடிக்கையாளர்களால் சிறிய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம்.

கும்பம்

நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேர வாய்ப்புள்ளது. இதனால் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். சிலருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம் என்பதால் அவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது நல்லது. அக்கம்பக்கத்தினரால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. குடும்ப விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகக் கிடைக்கும். தொழில் பணிகள் சுமுகமாக நடைபெறும்.

மீனம்

இன்று எந்தவொரு செயலையும் நன்கு சிந்தித்துச் செய்வது அவசியம். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்பட்டு மறையலாம். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் சிறிது அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டில் பொறுப்புகள் அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படலாம். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் இன்றி வழக்கமான நிலையே தொடரும்.