18 வயதில் செஸ் போட்டியில் வரலாற்று சாதனை: ஊக்கத்தொகை வழங்கி நேரில் வாழ்த்திய முதல்வர்

FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

Mar 13, 2025 - 17:15
 0
18 வயதில் செஸ் போட்டியில் வரலாற்று சாதனை: ஊக்கத்தொகை வழங்கி நேரில் வாழ்த்திய முதல்வர்
pranav venkatesh

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

18 வயதில் வரலாற்று சாதனை:

அந்த வகையில், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். அதனை கௌரவிக்கும் விதமாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயரிய ஊக்கத்தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பிரணவ் வெங்கடேஷ், கடந்த 2022-ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷூக்கு பரிசுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர் பிரணவ் வெங்கடேஷ் அவர்களின் பெற்றோர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow