Actor Vishal : “வெற்று பேப்பரில் கையெழுத்து... ரொம்ப புத்திசாலித்தனமான பதில்..” விஷாலை கண்டித்த நீதிபதி!

Actor Vishal Lyca Productions Case in Madras High Court : லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், வெற்று பேப்பரில் தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Aug 1, 2024 - 19:49
Aug 2, 2024 - 10:31
 0
Actor Vishal : “வெற்று பேப்பரில் கையெழுத்து... ரொம்ப புத்திசாலித்தனமான பதில்..” விஷாலை கண்டித்த நீதிபதி!
Actor Vishal Lyca Productions Case in Madras High Court

Actor Vishal Lyca Productions Case in Madras High Court: லைகா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் நடிகர் விஷால். கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தனது பெயரில், அதாவது விஷால் ஃபிலிம் பேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். இந்த நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

அந்தத் தொகையை விஷால் முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் வரை, அவரது பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், அதனை மீறி வீரமே வாகை சூடும் படத்தை சொந்தமாக வெளியிடுவதாக விஷால் அறிவித்திருந்தார். இதனால் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் குறுக்கு விசாரணைக்காக, நீதிபதி P.T. ஆஷா முன் நடிகர் விஷால் ஆஜரானார். 

லைகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகாவாச்சாரி, விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, லைகா நிறுவனத்துக்கும் விஷாலுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும். மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்

மேலும், இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல. கவனமாக பதிலளியுங்கள் என விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். சண்டக்கோழி 2 வெளியாவதற்கு 10 நாட்கள் முன் திருப்பித் தந்து விடுவதாக கூறி பணம் வாங்குனீர்களா? என்ற கேள்விக்கு, பாஸ் என விஷால் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோன்று பாஸ் எல்லாம் சொல்லக்கூடாது... ஆம் அல்லது இல்லை என்றும் மட்டுமே பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். லைகாவை தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறார்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆம் என பதிலளித்த விஷால், லைகா நிறுவனத்தால் தான் அந்த கடன் வாங்க நேர்ந்ததாகக் கூறினார். இந்த குறுக்கு விசாரணை முடிவடையாததால், இதனை நாளைக்கு (ஆக.2) தள்ளிவைத்த நீதிபதி, விஷால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow