“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” - வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல்...

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Aug 7, 2024 - 15:41
Aug 7, 2024 - 17:09
 0
“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” - வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல்...
ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்துள்ளது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. 

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும்  தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தினார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, கண்டனத்தையும், வினேஷ் போகத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி:

வினேஷ், நீங்கள் சாம்பியன்களுக்கு எல்லாம் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் நீங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளித்துள்ளீர்கள்.

இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதே சமயம், நீங்கள் மீள்தன்மையின் உருவகமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 140 கோடி மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். வினேஷ், உண்மையிலேயே, இந்தியப் பெண்களின் அயராத உத்வேகத்தை வெளிப்படுத்தினார். மேலும், அவரது வீரகாவியமான துணிச்சலும், எதிர்ப்பாற்றலும், இந்தியாவின் வருங்கால உலக சாம்பியன்களுக்கு, ஏற்கனவே ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. எதிர்காலத்தில் அவளுக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

முன்னாள் உளவு அதிகாரி மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்:

“இந்த ஆண் பெண் என அறிவிக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.

ஆனால் உலக சாம்பியனை தோற்கடித்த நமது மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 100 கிராம் அதிகமாகக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் நேர்மையின்மையின் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டு உள்ளது” என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்:

இறுதிப் போட்டிக்கு வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தேன். நீங்கள் எங்களது பெருமை. உங்கள் தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்களின் எங்களின் தங்கப் பதக்கம்.

பிவி சிந்து:

அன்பிற்குரிய வினேஷ் போகத், எங்கள் பார்வையில் நீங்கள் எப்போதும் ஒரு சாம்பியனாக இருப்பீர்கள். நீங்கள் தங்கம் வெல்வீர்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்தேன். படுகோன் – டிராவிட் விளையாட்டு மேன்மை மையத்தில் [Padukone – Dravid Centre for Sports Excellence] சிறிது நேரம் உங்களுடன் நான் செலவழித்து உள்ளேன்.

சிறந்ததை பெறுவதற்காக மனிதனுக்கு அப்பாற்பட்ட, அமானுஷ்யத்துடன் கூடிய குணத்துடன் போராடினீர்கள். அது எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. நான் எப்போதும் உங்களுக்காக இங்கே இருக்கிறேன். பிரபஞ்சத்தின் அனைத்து நேர்மறையானவைகளும் உங்கள் வழியனுப்பும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

இந்தியாவின் பெருமை, வினேஷ் போகட் உலக சாம்பியன்களை தோற்கடித்தார், ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நீதிக்காக பாதையில் போராட்டம் நடத்துவது முதல், ஒலிம்பிக் போட்டியின் உச்ச மேடையை அடைவது வரை அவர் நிறைய கடந்து சென்றுள்ளார். அவர் எப்படி இதனை கடந்து செல்லப்போகிறார் என்பதை நினைக்கையில் மிகவும் வேதனை அளிக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் முறையிட அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நம்முடைய சாம்பியனுக்கு நீதி கிடைக்க வழி வகுக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் வினேஷ் போகத். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன. உங்கள் தைரியம் என்றென்றும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் அதிக உறுதியுடன் வளையத்திற்குத் திரும்புவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow