Indian Air Force Day 2024 : இந்திய விமானப்படை தினம்.. வணிக வாகனங்களுக்கு நாளை தடை!

Indian Air Force Day 2024 : சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Oct 5, 2024 - 18:11
Oct 5, 2024 - 20:15
 0
Indian Air Force Day 2024 : இந்திய விமானப்படை தினம்.. வணிக வாகனங்களுக்கு நாளை தடை!
இந்திய விமானப்படை தினம்.. வணிக வாகனங்களுக்கு நாளை தடை

Indian Air Force Day 2024 : இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை (அக். 6) விமானப்படை சாகச நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடந்த இரண்டு நாட்களாக விமானப்படை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நாளை இந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருகைத் தருவர். இதனால் பொதுமக்கள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விமானப்படை தினத்தை(Indian Air Force Day 2024) முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி(Air Show) நடைபெறவுள்ளது. இதனால், காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. திருவான்மியூரில் இருந்து பாரிசுக்கு செல்லும் வாகனங்கள் சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலையை பயன்படுத்துமாறும், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: ஒருபக்கம் விவாகரத்து சர்ச்சை... ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு... வைரல் அப்டேட்!

அண்ணா சிலையில் இருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் மற்றும் வாலாஜா சாலையில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான சாகச கண்காட்சியைக் காண வருகை தரும் மக்களுக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow