தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய தொடங்கினார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதியமைச்சர் பட்ஜெட் உரையினை வாசித்து வரும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அமளி.
பட்ஜெட் உரையில் அமைச்சர் தெரிவித்து வருபவை: “இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் தமிழர்கள் சர்வதேச அளவில் தடம் பதிக்கின்றனர். 2026- தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.”
நிலுவையிலுள்ள ரூ.3,796 கோடி:
”எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழகத்திற்கு அவசியம். இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு செயல்படுகிறது. இந்திய துணைக்கண்ட வரலாறு தமிழக நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். ரூ.3,796 கோடியை மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்திட இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது”.
”சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி மற்றும் மாவட்ட புத்தக திருவிழாக்களின் அடுத்தகட்ட நகர்வாக புதுடெல்லி, மும்பை, திருவனந்தபுரம், சிங்கப்பூர் துபாய் ஆகிய இடங்களிலும் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தபடும் எனவும் இதற்காக இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும் தெரிவித்தார் நிதியமைச்சர்.
”தமிழ் செம்மொழியின் பெருமையை பரவிடும் வகையில் கணினி வழித்தமிழ் வரையில் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்.2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைப்பெறும்” எனவும் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
(பட்ஜெட் தொடர்பான தகவலுக்கு குமுதம் வலைத்தள பக்கத்தினை பின் தொடரவும்)