Director Ameer: “இருக்குற பிரச்சினைல இப்ப கார் ரேஸ் தான் முக்கியமா..?” இயக்குநர் அமீர் ஆதங்கம்!

சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 26, 2024 - 18:54
 0
Director Ameer: “இருக்குற பிரச்சினைல இப்ப கார் ரேஸ் தான் முக்கியமா..?” இயக்குநர் அமீர் ஆதங்கம்!
முதலமைச்சருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

சென்னை: தமிழ் தயாளன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் கெவி. இது கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளக்கெவி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில், கெவி படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது, அதில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கெவி படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தமிழக அமைச்சர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  

அதாவது, கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஆனால், கெவி என்ற கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால், மருத்துவமனை செல்ல ஏழு மணி நேரம் வரை ஆகிறது. அங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் உயிரிழந்தார். சுதந்திரம் பெற்றும் இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் இதுபோன்ற சிரமங்களை அனுபவிக்கிறோம்.  

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் ஆற்றை கடந்து மருத்துவமனைக்கு செல்வது, கல்வி கற்கச் செல்வது, உணவுப் பொருட்களை வாங்க செல்வது போன்ற நிலை உள்ளன. தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது எதற்காக கார் ரேஸ் பந்தயம் நடத்துகிறார்கள், இது ரொம்ப முக்கியமா? என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு வசதி இருக்கும் போது, கிராமங்களின் அடிப்படை வசதிகளையும் அரசு கவனிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வரும் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு பல கோடிகள் செலவு செய்து ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், வாழை திரைப்படம் வெற்றிப் பெறும் இடத்தில் உள்ளது. புதிய நடிகர்கள், இயக்குநர்கள் முதல்முறை படம் தயாரித்தால், அதனை வெளியிடுவதற்கு முன்பு அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை வைத்து சரி பார்க்க வேண்டும். அப்படி சரி பார்த்தால் தான் அந்தப் படத்தின் கருத்து மக்களிடையே சென்று வெற்றி அடையும். ஏசியன் விளையாட்டு போட்டி நடத்துவதும், ஒலிம்பிக் போட்டி நடப்பது குறித்தும் இந்த அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க - வாழை முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! 

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு ஒரு கிராமத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளை கூட செய்துதர மறுக்கிறார்கள். கெவி படத்தின் வெற்றி அரசியலில் எதிரொலிக்க வேண்டும். இந்த திரைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும், அவருடன் மற்ற அமைச்சர்களும் கெவி படம் பார்த்து அந்தப் பகுதிக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow