K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் GT முதலிடம்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பாஜக தலைவர் யார்? பரபரப்பான அரசிலயல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? சட்டப்பேரவையில் காரசார விவாதம்

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது? என்று சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் திமுக அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெப்போ வட்டு விகிதம் 0.25% குறைந்துள்ளதால், தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கபாலீஸ்வரர் கோயில் கோலாகலமாக தொடங்கிய தேரோட்டம்.. அரோகரா கோஷங்களுடன் தேரை இழுத்த பக்தர்கள்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

Gold Rate Today: தங்கம் விலை திடீர் ஏற்றம்..எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.

குமரி அனந்தன் மறைவு: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் (வயது 93) இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத காட்சிகள் காண்பேரை கலங்கச் செய்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.