சல்மன் ருஷ்டி ஒரு புகழ்பெற்ற இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். அவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். அவரது படைப்புகள் பெரும்பாலும் வரலாறு மற்றும் தத்துவார்த்த கருப்பொருள்களை மையமாக கொண்டதாக இருக்கும்.
சல்மான் ருஷ்டியின் படைப்புகள் பல இலக்கிய விருதுகளை வென்றுள்ளன. இருப்பினும், அவரது "தி சாட்டானிக் வெர்சஸ்" (The Satanic Verses) புத்தகம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதம் சார்ந்த கொள்கைகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என பல முஸ்லிம் நாடுகளில் இந்த புத்தகம் தடை செய்யப்பட்டதுடன், அவருக்கு மரண அச்சுறுத்தல்களும் வந்தன.
கத்திக்குத்து தாக்குதல் சம்பவம்:
இந்நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சௌடௌகுவா நிறுவனத்தில் நடைப்பெற்ற எழுத்தாளர்களின் பாதுகாப்பு (the United States as a safe haven for exiled writers) பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்ற சல்மன் ருஷ்டி பங்கேற்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சல்மான் ருஷ்டி உரையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு, மேடையின் மீது ஏறிய ஹாதி மாதார் கத்தியால் அவரைத் தாக்கினார். இந்தத் தாக்குதல் நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ருஷ்டியுடன் மேடையில் இருந்த ஹென்றி ரீஸும் காயமடைந்தார்.
இந்த தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் ஒரு கண் பார்வை பறிபோனதுடன், அவரது கல்லீரல் மற்றும் கைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய ஹாதி மாதார் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்ற வந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மே 16, 2025 அன்று அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எதற்காக தாக்க முயன்றார்?
ருஷ்டியின் "The Satanic Verses" என்ற புத்தகம் இஸ்லாத்திற்கு எதிரானது என பல்வேறு முஸ்லீம் மதத்தை பின்பற்றும் நாடுகள் தடை செய்தது என ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தோம். அப்போதைய காலக்கட்டத்தில், 1989 ஆம் ஆண்டு, ஈரானின் அப்போதைய உயர்மட்டத் தலைவர் அயதுல்லா கொமேனி ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்து ஒரு ஃபத்வா (Fatwa - மத ஆணை) பிறப்பித்தார்.
தாக்குதல் நடத்திய ஹாதி மாதார், ஷியா முஸ்லீம் தீவிரவாதி என்றும், லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. ஹாதி மாதார் நீதிமன்றத்தில் தனது தாக்குதலுக்கான காரணங்களை வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதும், ருஷ்டி தெரிவித்துள்ள கருத்துகளை தான் ஏற்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது எழுத்துகள்,கருத்துக்கள் அனைத்து மூடநம்பிக்கை உணர்வுகளுக்கு எதிராகவும் இருக்கிறது. இந்த தன்மை சல்மான் ருஷ்டியை சமகால இலக்கியத்தில் ஒரு முக்கியமான நபராக நிலைநிறுத்தியுள்ளன என்றால் மிகையல்ல. 2022 ஆம் ஆண்டு தன் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி ”Knife: Meditations After an Attempted Murder” என்கிற புத்தகத்தை எழுதியிருந்தார். 2024 ஆம் ஆண்டு வெளியான இந்த சுயசரிதை புத்தகம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சால்மன் ருஷ்டி எழுதிய புகழ்பெற்ற புத்தகங்கள்:
மிட்நைட்ஸ் சில்ட்ரன் (Midnight's Children), ஷேம் (Shame),தி சாட்டானிக் வெர்சஸ் (The Satanic Verses),ஹரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரீஸ் (Haroun and the Sea of Stories),தி மூர்ஸ் லாஸ்ட் சை (The Moor's Last Sigh), க்ரவுண்ட் பினீத் ஹர் ஃபீட் (The Ground Beneath Her Feet),ஃபியூரி (Fury),ஷாலிமார் தி க்ளவுன் (Shalimar the Clown), தி என்சாண்ட்ரஸ் ஆஃப் புளோரன்ஸ் (The Enchantress of Florence),டூ இயர்ஸ் எய்ட் மந்த்ஸ் அண்ட் ட்வென்டி-எய்ட் நைட்ஸ் (Two Years Eight Months and Twenty-Eight Nights),குயிக்சோட் (Quichotte),நைஃப்: மெடிடேஷன்ஸ் ஆஃப்டர் ஆன் அட்டெம்ப்டட் மர்டர் (Knife: Meditations After an Attempted Murder)