joe biden trying to kiss another woman: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இதற்காக இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பிரசாரத்தில் பங்கேற்று பேசியபோது, 20 வயது இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் காதில் காயம் அடைந்த டிரம்ப், மருத்துமனையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் சுறுசுறுப்புடன் பிரசாரம் செய்து வருகிறார்.
ஆனால் 81 வயதான அதிபர் ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அத்துடன் அவர் அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அச்சாரமாக அமைந்தது ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த முதல் விவாதம்தான்.
அமெரிக்க தேர்தல் வழக்கப்படி அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மக்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 90 நிமிடங்கள் நடந்த விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.
இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் தடலாடியாக பேசியபோது, பைடன் அவருக்கு உரிய பதிலடி கொடுக்கவில்லை. இது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் வயது முதிர்வு காரணமாக ஜோ பைடன் மறதி பிரச்சினையிலும் சிக்கியுள்ளார்.
மறதி காரணமாக பொது நிகழ்ச்சிகளில் சொந்த கட்சியினரின் பெயர்கள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டவர்களின் பெயரை மறந்து அவர் மாற்றி, மாற்றி கூறியது சர்ச்சையை கிளப்பியது. இதனால்தான் ஜோ பைடனை மாற்றி விட்டு, கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்கிறார்.
இதை பார்த்த பைடனின் மனைவி பதறியடித்தபடி ஓடி வந்து, ஜோ பைடனை விலக்கி விடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. ஜோ பைடன் மறதி காரணமாக தனது பக்கத்தில் இருப்பது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ ஜோ பைடனை எதிர்க்க ஜனநாயக கட்சியினருக்கு கூடுதல் ஆதாரமாக அமைந்துள்ளது.