தமிழ்நாடு

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது

நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து - யூடியூப்பர் வாராகி கைது
நடிகர் விஷால் மற்றும் யூடியூப்பர் வாராகி
நடிகர் விஷால் குறித்து அவதூறாக பேட்டி அளித்தது தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் யூடியூப்பர் வாராகியை கைது செய்துள்ளனர். அதேபோல புதிய பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக அவதூறு டிவிட் செய்ததாக ஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் அளித்த புகாரில் கீழ்ப்பாக்கம் போலீசார் Youtuber வாராகியை கைது செய்துள்ளனர்.

யூடியூப்பர் வாராகி கைது

ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக இருந்தபோது தேரணிராஜன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல பணம் கேட்டு மிரட்டியதாக பத்திரப்பதிவு அலுவலர்கள் அளித்த புகாரில் மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதியப்பட்டதால், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், வாராகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வாராகி (எ) கிருஷ்ணகுமார் (51), யூடியூப்பர் செங்கல்பட்டு சிறையில் இருந்த நிலையில், கீழ்ப்பாக்கம் G3 PS குற்ற வழக்கில் PT Warrant மூலம் இன்று மதியம் எழும்பூர் 2வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 30.09.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் செங்கல்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.