தமிழ்நாடு

கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: மேற்கு மண்டல அதிகாரிகள் பங்கேற்பு!

கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.

கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: மேற்கு மண்டல அதிகாரிகள் பங்கேற்பு!
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: மேற்கு மண்டல அதிகாரிகள் பங்கேற்பு!
காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கான மேற்கு மண்டல துப்பாக்கி சுடும் போட்டி கோயம்புத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

காவல் துறையில் மாநில மற்றும் மண்டல அளவில் நடத்தப்படும் துப்பாக்கி சுடும் போட்டிகளின் ஒரு பகுதியாக, மேற்கு மண்டல அதிகாரிகளுக்கான போட்டி கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலத்தின் கீழ் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையாளரின் கீழ் உள்ள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) மற்றும் கூடுதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி) பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரும் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வார்கள்.