தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையானது எவ்வித தரவுகளும் இன்றி தவறான தகவலை உள்ளடக்கியுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
”தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த அறிக்கையில் வேளாண் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், மீன்வளத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், கேழ்வரகு - கொய்யா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளதாகவும், 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மூலமாக ஒதுக்கப்பட்ட தொகை மூலமாக மிகப்பெரிய வேளாண் வளர்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்."
வாழை உற்பத்தியில் மட்டுமே முதலிடம்:
” உண்மையில் தமிழ்நாடு வேளாண்மையில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளது. நெல் - கரும்பு - பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது. நெல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.62 சதவீதத்தில் இருந்து 5.64 சதவீதமாக குறைந்து இருக்கிறது. மத்திய அரசு 10.25% கரும்பில் சர்க்கரை சத்து இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை வழங்க முடியும் என அறிவித்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் சராசரியாக கரும்பில் 9.5% மட்டுமே சர்க்கரை சத்து உள்ளது.
பால் உற்பத்தியில் முதல் ஐந்து இடத்தில் தமிழ்நாடு இல்லை, நெல் உற்பத்தியிலும் அதுபோன்று கிடையாது, கரும்பில் மிகப்பெரிய பின்னடைவு, தேங்காயில் இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும், வாழைப்பழ உற்பத்தியில் மட்டுமே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.”
விவசாயிகளின் மாதாந்திர வருமானம்:
”விவசாய குடும்பங்களின் சராசரி மாதாந்திர வருமானத்தில் மேகாலயா 29,434 ரூபாயுடன் முதலிடத்திலும், 26,701 ரூபாயுடன் பஞ்சாப் இரண்டாம் இடத்திலும் உள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் விவசாய குடும்பங்களின் மாதாந்திர சராசரி வருமானம் 11,924 ரூபாய் மட்டுமே ஆகும். விவசாயிகளின் வருமானத்தில் 14-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது, 61% குடும்பங்கள் மீட்க முடியாத தொடர் கடனில் உள்ளதாக தமிழ்நாடு அரசின் திட்டக் குழு தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கிறது, சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 1,00,266 ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
விவசாயிகள் மூன்றில் இரண்டு பேர் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளார்கள், உண்மையான நிலவரம் இப்படி இருக்க, விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி கொண்டு இருக்க, இது போன்ற ஒரு தவறான அறிக்கையை தமிழ்நாடு அரசு எவ்வித தரவுகளும் இன்றி வெளியிட்டுள்ளது. எனவே இந்த அறிக்கை எந்தெந்த தரவுகளின் அடிப்படையில், புள்ளி விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை உடனடியாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசு நிர்ணயம் செய்கிற குறைந்தபட்ச ஆதார விலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கட்டுபடி ஆவதில்லை. எனவே தமிழ்நாடு அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.”
வாக்குறுதிகள் என்னாச்சு?
”மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்குவேன் என்றும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவேன் என்றும் கொடுத்த வாக்குறுதி இன்னும் செயல்படுத்தப்படாமலேயே இருக்கிறது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு உணவுக்கு அண்டை மாநிலங்களையும், அண்டை நாடுகளையும், தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆண்ட கட்சிகளின் கொள்கைகள் காரணமாக கையேந்த வைத்திருக்கிறது.
எனவே பொய்யான புள்ளி விவரங்களை தருவதை விட்டுவிட்டு, உண்மையை அலசி ஆராய்ந்து தமிழ்நாடு அரசு விவசாயிகளை காப்பாற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.