தமிழ்நாடு

நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் டைம் கீப்பரிடம் தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!
நிற்காமல் சென்ற பேருந்து... தட்டிகேட்ட பயணியை தாக்கிய டைம் கீப்பர்... போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரவணகு குருநாதன் வயது 40, இவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தினமும் சரவண குருநாதன் கிண்டியில் இருந்து பேருந்து மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து பூந்தமல்லி செல்லும் பேருந்து பயணம் செய்வது வழக்கம் உள்ளது. 

அதேபோல நேற்று முன்தினம் சரவண குருநாதன் வேலையை முடித்துவிட்டு கிண்டியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து பின்னர் பூந்தமல்லி செல்வதற்காக 101 பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். ஆனால் பேருந்து நிற்காமல் கிளம்பியதால் சரவண குருநாதன் பேருந்தை தட்டிய போதும் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சரவண குருநாதன் இதுகுறித்து அங்கிருந்த டைம் கீப்பர் இடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், டைம் கீப்பருடன் நடத்துனர் ஓட்டுனர் ஆகியோர் இணைந்து சரவண குரு நாதனை தாக்கி காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சரவண குருநாதனை மூன்று பேர் சேர்ந்து எட்டி உதைத்து சட்டையை பிடித்து இழுத்து தாக்கக்கூடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் வராத நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து சிஎம்பிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு என்ன நடந்தது என்பது தொடர்பான முழு விபரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.