மருத்துவர்களுக்கு வழங்கியதைப் போல், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள்:
தமிழக அரசு செப்டம்பர் மாத இறுதிக்குள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதால், மருத்துவர்களுக்கு வழங்கியது போல், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றி, அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்பி, மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தப் போதிய நேரம் வழங்காமல், அடிக்கடி தேர்வுகளை நடத்தச் சொல்லி முதன்மைக் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதைத் தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.