சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
- இடைக்கால இழிவுகள் நீங்க வள்ளூவர், வள்ளாலார், அயோத்திதாசர் என பண்டிதர்கள் தோன்றினர். அந்தவரிசையில் சுயமரியாதையை ஊட்டியவர் பெரியார்.
- சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வாழ்வியலை மேடைகளில் எடுத்து சொல்லி இலக்கியம் படைத்தது திராவிடம்.
- சங்கத்தமிழ் இலக்கியங்களில் சாறு எடுத்து வரலாற்றை சொன்னவர் கலைஞர்.
- தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது.
- 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
- புனே நகரிலுள்ள பீர்பால் சகானிதொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
- தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப்பகுப்பாய்வும் ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்ததைய மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன.
- உலக அளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறுவோம்.
- தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டே தொடங்கியது என்று கீழடி அகழாய்வுகள் நிறுவியுள்ளது.
- பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது.
- தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக அறிவித்தேன்.
- உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது.
- பழம் பெருமையை பேசுவது என்பது புது சாதனையை படைக்க ஊக்கமாக அமையும் என்று கூறினார்.