தமிழ்நாடு

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...
IAS Officers Tranfer in Tamil Nadu

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழக உள்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாறு:

உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், நீலகிரி, கடலூர், குமாரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திர கலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக சிம்ரன் வித் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி ஆட்சியராக செயல்பட்டு வந்த அருணா ஐஏஎஸ், புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னீரு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அழகுமீனா ஐஏஸ்ஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுமதி ஐஏஎஸ் பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கான இடமாற்றம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்திற்கான உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.