சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில், நாமக்கல்லை சேர்ந்த சபரீஸ்வரன் (19) என்பவர் பயின்று வந்தார்.
இவர் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி பேச்சுலர் ஆஃப் லெதர் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தங்கி இருந்த விடுதி அறையில் மொத்தம் நான்கு மாணவர்கள் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மற்ற மூன்று மாணவர்கள் கல்லூரிக்கு சென்ற நிலையில் இவர் மட்டும் விடுதியிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதிய இடைவேளையின் போது விடுதிக்கு வந்த மாணவர்கள் சபரீஸ்வரன் தங்கிருந்த அறைக்கதவை தட்டிய போது நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விடுதி காவலாளிகளிடம் கூற, பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சபரீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து கோட்டூர்புரம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீஸ்வரன், கடந்த பத்து நாட்களாக தனக்கு இங்கு படிக்க விருப்பமில்லை எனவும் தான் பாதியிலேயே படிப்பை நிறுத்தப் போவதாக சக மாணவர்களிடம் கூறி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் இந்தக் கல்லூரியில் படிக்க விருப்பமில்லாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சபரீஸ்வரன் 2024 ம் வருட கல்வி ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள அழகப்பா கல்லூரியில் பிடெக் லெதர் டெக்னாலாஜி பிரிவை எடுத்து படித்து வந்தவர். முதல் செமஸ்டரில் 8 ல் 5 பாடம் பெயிலாகி விட்டதாகவும், இரண்டாம் செமஸ்டரில் 7ல் 5 பாடம் பெயிலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ராகிங் கொடுமையால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தாயார் ராசாத்தி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். தனது மகனை சில மாணவர்கள் குடிக்க வைத்தும், சிகரெட் பிடிக்க வைத்தும் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. மேலும் தனது மகனை தாடி, மீசை எடுக்க வைத்தும் டார்ச்சர் செய்து உள்ளதாக அவரது தாயார் ராசாத்தி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மேலும், ராகிங் கொடுமை என்று புகார் கொடுத்துள்ளதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்தி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இறந்து போன சபரீஸ்வரனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).