தமிழ்நாடு

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!
Gold Price
கடந்த சில நாட்களாகக் கடுமையான ஏற்ற இறக்கத்தைக் கண்டுவந்த தங்கம் விலை, இன்று (அக். 11) மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையின் ஏற்றம்

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சி அளித்திருந்தது. நேற்று (அக். 10) காலையில் விலை அதிரடியாகக் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும், பிற்பகலில் மீண்டும் அதிகரித்தது.

நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.90,720-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்குக் கீழ் வந்திருந்தது.

இன்றைய விலை நிலவரம்

இன்று, தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலையை விட வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.