தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு.. முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு.. முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்குகள் சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் ஜாமின் கொடுக்க மறுத்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பதவியா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.