ரோட்டரி சங்கம் பெண்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி பெற ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தோடு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் “கோல்டன் ஸ்பேரோ” நிகழ்வு கோயம்பேட்டிலுள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி கலையரங்கத்தில் நடைப்பெற உள்ளது.
கோல்டன் ஸ்பேரோ நிகழ்வின் நோக்கம்:
இந்த நிகழ்வு குறித்து ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் தெரிவிக்கையில்,”பெண்களின் பங்களிப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கலை, பேச்சு, கருத்து, செயல், சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் தேவதையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியே இந்த "கோல்டன் ஸ்பேரோ". இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு பெண்ணும், அதைத் தன்னில் இருந்து தொடங்க வேண்டும்.”
” இந்த "கோல்டன் ஸ்பேரோ" நிகழ்வு ஜெயஸ்ரீ போத்ரா அவர்களின் எண்ணத்தில் உதித்த ஒரு அற்புதமான முயற்சி. ரோட்டரி மாவட்டம் 3233-ன் முதல் பெண்மணியான இவர், பெண்களின் முன்னேற்றத்திலும், அவர்களின் ஆற்றலை வெளிக் கொணர்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருக்கு உறுதுணையாக மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தலைவராக டாக்டர். சுஜாதா ஸ்ரீனிவாசன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு குறித்த மேலும் தகவலுக்கு பின்வரும் தொடர்பு எண்ணை அணுகவும் (தொடர்பு எண்: 90940 21144). நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் இணைப்பின் வாயிலாக தங்களது பெயரை பதிவு செய்யலாம்.
Golden sparrow women carnival program Registration form
தமிழ்நாடு
ரோட்டரி சார்பில் ”கோல்டன் ஸ்பேரோ”.. பெண்களின் திறமையினை பறைசாற்ற புதிய மேடை
ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.