தமிழ்நாடு

இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்: 2017ல் வெளியிட்ட போஸ்ட்டை மீண்டும் வெளியிட்டு ராகுல் காந்தி உறுதி!

H-1B விசா விவகாரம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட கருத்து; மீண்டும் பாஜக-வை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்: 2017ல் வெளியிட்ட போஸ்ட்டை மீண்டும் வெளியிட்டு ராகுல் காந்தி உறுதி!
இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்: 2017ல் வெளியிட்ட போஸ்ட்டை மீண்டும் வெளியிட்டு ராகுல் காந்தி உறுதி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2017-ஆம் ஆண்டு தான் பதிவிட்ட சமூக வலைதளப் பதிவு ஒன்றை மீண்டும் பகிர்ந்து, இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக இருக்கிறார் என்ற தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தேசிய அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் H-1B விசா கொள்கை தொடர்பாகப் பிரதமர் மோடியை விமர்சித்து, "இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக இருக்கிறார். நமது வெளியுறவுக் கொள்கை பலவீனமாக உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்கா நமது நாட்டின் திறமைக்கு அடிமையாக்கும் வகையில் விசா விதிகளை மாற்றியமைக்கிறது" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 20, 2025) அதே பதிவை ராகுல் காந்தி மீண்டும் பகிர்ந்து, மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ரீ-போஸ்ட், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார்.