தமிழ்நாடு

17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்: காவல்துறை விளக்கம்

இளைஞர் மீது கொலை முயற்சி, இளைஞரை காப்பாற்ற சென்ற காவல் அலுவலரை கொலை செய்ய முயற்சித்தபோது, சிறுவன் மீது தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக விளக்கம்

17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்: காவல்துறை விளக்கம்
நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி பாப்பாக்குடி காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார் (22) என்பவர் தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார்.

காவலர்கள் மீது தாக்குதல்

பாப்பாக்குடி பகுதியைச்சேர்ந்த இரண்டு சிறார்கள் சக்திகுமாரை வரவைத்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். மேலும் நாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியில் மற்றும் காவல்துறைக்கு எப்படி தெரிவிக்கலாம் என்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர். இளம் சிறார்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரண்டு சிறார்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு

தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை ரஞ்சித் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதனை தடுக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் முருகனையும் வெட்ட முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சம்பவ இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் சென்ற காவல்துறை மீது தாக்குதல் நடத்த கதவை ஆக்ரோஷமாக தாக்கி வெட்டி உள்ளனர்.

வீட்டுக்குள் இருந்த பெண் மற்றும் அவருடைய குழந்தை மற்றும் காவலர்களை தற்காத்துக்கொள்ளை இந்த துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதாகவும், பின்னர் காயம் அடைந்த காவலர் ரஞ்சித் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த சக்திவேல் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இளைஞர் ஒருவர் மூன்று பேரும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

ஏற்கனவே இந்த இளஞ்சிறார் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிதம்பரசர் சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாப்பாக்குடி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.