தமிழ்நாடு

மதுக்கடையை திறந்து விடுங்கள்...மனு அளித்த மதுபிரியர்கள்

எப்படியாவது மதுக்கடையை திறந்து விடுங்கள், எங்களால் அது இல்லாமல் இருக்க முடியாது என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மதுபிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடையை திறந்து விடுங்கள்...மனு அளித்த மதுபிரியர்கள்
டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மனு அளித்த மதுபிரியர்கள்
மதுக்கடையை திறக்க கோரி மனு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு முகாமானது நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைதீர் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கிய நிலையில், ஆலங்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட காளாத்திமடம் என்கின்ற பகுதியை சேர்ந்த சில நபர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து பரபரப்பு மனு ஒன்றினை அளித்தனர்.

அந்த மனுவில், தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது எனவும், கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ள இந்த அரசு மதுபானக்கடையை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மதுப்பிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்

மேலும், அந்த மனுவில், பொதுமக்களுக்கோ பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, கோவில்களுக்கு செல்பவர்களுக்கோ எந்த விதமான இடர்பாடும் இல்லாத இடத்தில் உள்ள இந்த அரசு மதுபான கடையை ஏன் மூட வேண்டும் எனவும், இந்த மதுபான கடையில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் மது வாங்கி குடித்து வரும் நிலையில், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடினால் அவர்கள் பெரிதளவிலும் பாதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, அந்த பகுதியில் உடனடியாக மீண்டும் மதுக்கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.