நீட் தேர்வு
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 23 லட்சம் பேர் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.குறிப்பாக சென்னையில் மட்டும் 44 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.கோவையில் 22 வயது திருநங்கை இந்திரஜா என்பவர் 2வது முறையாக இன்று நீட் தேர்வு எழுதினார். முன்னதாக பேசிய அவர், கல்வி மட்டுமே எங்களது எதிர்காலத்தை மாற்றும் என தெரிவித்துள்ளார்.
இயற்பியல் கேள்விகள் கடினம்
நீட் தேர்வு சரியாக பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.20க்கு நிறைவடைந்தது. இதில் இயற்பியல் பாடம் சார்ந்த கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.